Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் 2.0 இசைவெளியீட்டு நிகழ்வு! இந்திய திரைத்துறை வரலாற்றில் டுபாயில் ஒரு புதிய பாய்ச்சல்!

In சினிமா
Updated: 17:10 GMT, Oct 27, 2017 | Published: 17:10 GMT, Oct 27, 2017 |
0 Comments
1519
This post was written by : Sivaguru Siva

உலகளாவிய அளவில் இதுவரை எத்தனையோ Science fiction எனப்படும் அறிவியல் புனை கதைகளை தழுவிய திரைப்படங்கள் வந்துள்ளன. இந்தியாவிலும் ஏற்கனவே இவ்வாறான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் இந்தியத்திரைத்துறை வரலாற்றைப் பொறுத்தவரை லைகாவின் தயாரிப்பில் சுமார் 450 கோடி இந்திய ரூபாயில் உருவாகும் 2.0 திரைப்படம்(3 டி) ஒரு பதிவை உருவாக்கியுள்ளது.

1509109124_2-0-press-meet

இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் ரஜனிகாந்த் அக்ஷைகுமார் மற்றும் எமி ஜக்சனின் ஆகியோரின் நடிப்பில் தமிழ் ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில்   உருவான 2.0 இன்னும் 3 மாதங்களில் திரைக்கு வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகள் 2.0 இன் மூலமொழிகளாக இருந்தாலும் மொத்தம் 15 மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட 2.0 வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2.0 திரைப்படத்தின் விளம்பரயுக்தி பெரும் அசத்தலாக இருந்தமை உலக திரைத்துறையையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

அமெரிக்காவின் ஹொலிவூட்டில் இருந்து பெரும் பலூன் ஊடாக தொடங்கிய 2.0 விளம்பரம் உலகின் மிகப்பிரசித்திபெற்ற டுபாயின் புர்ஜ் கலிபா ஆடம்பர விடுதி கோபுரத்தில் (2 721 அடி உயரம்)ஒளிர்ந்த  விளம்பரப்பதாதை வரை பிரமாண்டமாக இதுவரை நகர்த்தப்பட்டுள்ளது.

Burj-Khalifa

2.0 வின் இந்த விளம்பரங்களுக்காக மட்டும் இந்தியரூபாயில் 40 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிலும் இன்று டுபாயில் இடம்பெற்ற 2.0 வின் இசைவெளியீடு இந்திய திரைத்துறை வரலாற்றில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்துக்கும் சாத்தியப்படாதது.

டுபாய் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் புர்ஜ் கலிபா ஆடம்பர விடுதிக்கு அருகில்11 300 சதுர மீற்றர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் புர்ஜ் பூங்காவில் டுபாய் உள்ளுர் நேரம் மாலை 6 மணிக்கு ஆரம்பமான இந்த இசைவெளியீட்டு நிகழ்வு இரண்டு மணிநேரத்துக்கு நடந்தது.

Audio-Launch-stage

ஓஸ்கார் விருதுபெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மானின்நெறியாழ்கையில் 125 சிம்பொனி இசைக்கலைஞர்களுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

2.0 திரைப்படத்தில் இருந்த 3 பாடல்களில் தமிழ் ஹிந்தி தெலுங்கு என 3 மொழிகளிலும் ஒவ்வொன்றிலும் இருந்து தலா இரண்டு பாடல்கள் பாடப்பட்டன.

இந்த நிகழ்வை தமிழில் பிரபல அறிவிப்பாளரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜியும் ஹிந்தியில் பொலிவூட் திரைத்துறைதயாரிப்பாளர் கரன் ஜொகாரும், தெலுங்கில் ரொலிவூட் நட்சத்திரம் ராணா டகுபதியும் தொகுத்தளித்தனர்.

மும்பாயின் பிரபலமான பொஸ்கோ நடன நிறுவனக் கலைஞர்கள்; பாடல்களுக்கான நடன நிகழ்;வுகளை வழங்கினர். நடிகை தமன்னாவும் ஒரு நடனத்தை வழங்கியதாக தெரிகிறது.

பாரிய எல்.ஈ.டி திரைகளில் ஒளிபரப்பான இந்த நிகழ்வை வெளியே லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்தனர்

இந்தியத்திரைத்துறையில் இதற்கு முன்னர் இப்படி எந்த ஒரு படத்துக்கும் இசைவெளியீடு நடத்தப்பட்டதில்லை. இந்த நிகழ்வுக்குரிய வி.ஜ.பி மேசை ஆசனங்கள் சுமார் பத்தாயிரம் டொலர்களுக்கு விற்பனையாகின. (ஆதாரம் போர்ப்ஸ் சஞ்சிகை). பிரமுகர்களுக்கான இலவச சீட்டுக்களும வழங்கப்பட்டுள்ளன.

ஆகமொத்தம் 2.0 க்காக  இந்திய திரைத்துறை வரலாறு சார்பாக டுபாயில் ஒரு புதிய பாய்ச்சல் நடத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg