Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொழுதுபோக்குக்காக சினிமாவுக்கு வந்தேன்: கத்ரீனா கைப்

In சினிமா
Updated: 17:30 GMT, Oct 27, 2017 | Published: 17:30 GMT, Oct 27, 2017 |
0 Comments
1379
This post was written by : Vithushagan

பொழுதுபோக்குக்காகத் தான் நான் நடிக்க வந்தேன் ஆனால் இப்போது எனக்கு நடிப்பே தொழிலாகி விட்டது என ஹிந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார்.

கத்ரீனா தற்போது ஹிந்தி சூப்பர் ஸ்டார்களான சல்மான்கான், சாருக்கான், அமீர்கான் படங்களில் நடித்து வருகிறார். இது பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களுடன் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. பொழுதுபோக்காகத் தான் நான் நடிக்க வந்தேன். இப்போது எனக்கு நடிப்பே தொழிலாகி விட்டது.

அதை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கிறேன். சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்து செயல்படுகிறேன். ரசிகர்களின் ஆதரவும், ஆசீர்வாதமும் இருந்தால் எல்லாம் நடக்கும். அவர்களால் தான் என்னால் இந்த இடத்துக்கு வர முடிந்தது” என்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg