Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான்காவது முறையாக சிவாவுடன் இணையும் அஜித்!

In சினிமா
Published: 17:40 GMT, Oct 27, 2017 |
0 Comments
1381
This post was written by : Vithushagan
201706291302407992_vivegam333._L_styvpf

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நான்காவது முறையாக இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரது கூட்டணியில் உருவான ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும், ரசிகர்களிடம் மற்றும் வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இப்படத்தை அடுத்து அஜித், மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. மேலும், அந்த படம் வரலாற்று சம்மந்தப்பட்ட கதை என்றும், பொலிஸ் அதிகாரி என்றும் கூறப்பட்டது.

இதைத்தவிர விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், தற்போது சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg