Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால்: புதிய சட்டத்தின் கீழ் தண்டனை

In இந்தியா
Published: 02:39 GMT, Oct 28, 2017 |
0 Comments
1187
This post was written by : Kemasiya
Kim-Fight-Back

ஆர்ப்பாட்டங்களின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால், 5  வருடம் சிறைத்தண்டனை  விதிக்கப்படும் என காஷ்மீர் மாநிலத்தில் புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் பொருட்டு, ‘காஷ்மீர் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் தவிர்ப்பு -2017 இன் கீழ்’ இந்த சட்டத்தை ஆளுநர் என்.என்.வோரா நேற்று  (வெள்ளிக்கிழமை)   பிறப்பித்துள்ளார்.

இந்தச் சட்டத்தின்படி மேற்படி போராட்டங்களின் போது, பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவோருக்கு, 2 முதல் 5 வரையிலான காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன், மேலும் சேதம் ஏற்பட்ட பொருட்களின் சந்தை மதிப்பிற்கு ஈடான தொகை அபராதமாகவும் விதிக்கப்படும்.

இதன் மூலம் போராட்டங்களின் போது, பொது அல்லது தனிநபர் அமைப்புக்களால் தனியார் அல்லது பொது சொத்துக்கள் சேதமடைவதினை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கு எதிராக, அடிக்கடி போராட்டங்கள் கடையடைப்பு ஆகியன இடம்பெற்ற வரும் நிலையில், இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg