Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயாவின் இடத்தைக் கூட கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக செயற்படுகின்றது அரசு: ஸ்டாலின் கண்டனம்

In இந்தியா
Updated: 03:38 GMT, Oct 28, 2017 | Published: 03:38 GMT, Oct 28, 2017 |
0 Comments
1295
This post was written by : Kemasiya

ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்த தொகுதியை கூட தற்போதைய தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. எல்லாம் சரிவர நடக்கின்றது என வார்த்தைகளால் சொன்னால் போதாது, செயற்பாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அந் நகரை பார்வையிட்டதோடு அங்குள்ள மக்களின் நிலைமைகள் குறித்து நன்கு ஆராய்ந்து, மக்களுடன் கலந்துரையாடிய பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

“என்னுடைய அறிக்கை வெளிவந்த பின்னர் அமைச்சர் உதயகுமார், நான் திட்டமிட்டு அரசியல் நோக்கத்தோடு ஒரு தவறான பிரசாரத்தை செய்வதாகவும், எதிர்க்கட்சித் தலைவரான நான் சொல்வது உண்மையல்ல எனவும், எல்லா நடவடிக்கைகளும் நூறு வீதம் சரிவர நடப்பதாகவும், ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அது உண்மைதானா என அறிவதற்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகை தந்து, காலையில் இருந்து பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டேன்.

இங்குள்ள கால்வாய்கள் எந்த நிலையில் இருக்கின்றன, அதனால் கொசு எப்படி உற்பத்தியாகிறது, டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது என்ற காட்சிகளை நேரில் பார்த்தேன். குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலையில், கழிவுநீர் கலந்து வரும் சூழ்நிலை நிலவுகிறது.

ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்த ஆர்.கே.நகர் தொகுதியை கூட, இந்த ஆட்சியினர் கண்டும் காணாமல் விட்டிருப்பது கொடுமையான விடயம்.

எப்படி அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, அதே போன்று மழை வெள்ளத்தை பொறுத்தவரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் அறிக்கைகளை வெளியிடுகின்றார்களே தவிர, வேறு எதையும் இந்த  ஆட்சி செய்யவில்லை.

இன்னும் இரண்டொரு நாள் பொறுத்திருப்போம். உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்காவிட்டால், குறிப்பாக, இந்த ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த திமுக தொண்டர்கள், நிவாரணப் பணிகளில், சுத்தம் செய்கின்ற பணியில் நிச்சயமாக ஈடுபடவிருக்கிறார்கள் என ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg