Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னிலிருந்து கதலோனியா சுதந்திரம் பெறுவதாக அறிவிப்பு

In
Published: 04:06 GMT, Oct 28, 2017 |
0 Comments
1218
This post was written by : Suganthini

கதலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கான அறிவிப்பை அதன் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) ) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரிய கதலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு, இம்மாதம் முதலாம் திகதி நடத்தப்பட்டபோது, வாக்கெடுப்பில் 2.3 மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர். கதலோனியா தனிநாடாகும் பிரகடனத்துக்கு ஆதரவு தெரிவித்து 90 சதவீதமானோர்வாக்களித்தனர்.

இதனை அடுத்து, கதலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கான ஒப்பந்தத்தில் கதலோனியத் தலைவர்கள் கையொப்பமிட்டபோதிலும், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.

இந்நிலையில், கதலோனியா நாடாளுமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) கூடியபோது, கதலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கான அறிவிப்பை கதலோனியத் தலைவர் வெளியிட்டுள்ளார். கதலோனியாவுக்கான சுதந்திரம் கோரிய வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg