Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதலோனிய நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த அறிவிப்பு

In
Published: 04:13 GMT, Oct 28, 2017 |
0 Comments
1199
This post was written by : Suganthini

ஸ்பெய்னிலிருந்து கதலோனியா பிரிந்து தனிநாடாகும் அங்கீகாரத்தை அறிவித்த சிலமணி நேரத்தில், கதலோனியா நாடாளுமன்றத்தைக் கலைத்து அங்கு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் வெளியிட்டுள்ளார்.

ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரிய கதலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு, இம்மாதம் முதலாம் திகதி நடத்தப்பட்டபோது, வாக்கெடுப்பில் 2.3 மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர். கதலோனியா தனிநாடாகும் பிரகடனத்துக்கு ஆதரவு தெரிவித்து 90 சதவீதமானோர்  வாக்களித்தனர்.

இதனை அடுத்து, கதலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கான ஒப்பந்தத்தில் கதலோனியத் தலைவர்கள் கையொப்பமிட்டபோதிலும், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.

இந்நிலையில், கதலோனியா நாடாளுமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) கூடியபோது, கதலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கான அறிவிப்பை கதலோனியத் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து, ஸ்பெய்ன் அரசாங்கம் அவசரமாக அமைச்சரவையைக் கூட்டிய நிலையில், கதலோனிய நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி தேர்தலுக்கான அறிவிப்பை ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ராஜோய் வெளியிட்டுள்ளார்.

கதலோனியத் தலைவர் மற்றும் அவருடைய அனைத்து ஆதரவாளர்களும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ராஜோய் கூறியுள்ளார்.

அத்துடன், கதலோனிய பிரிவினைவாத இயக்கத்தை தடைசெய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் மூலம் அம்மாகாணம் ஸ்பெய்னின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg