Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தகத்தை விட்டு வெளியே வாருங்கள்: ஜ.ஏ.எஸ் பரீட்சார்த்திகளுக்கு மோடியின் அறிவுறுத்தல்

In இந்தியா
Updated: 04:26 GMT, Oct 28, 2017 | Published: 04:26 GMT, Oct 28, 2017 |
0 Comments
1148
This post was written by : Kemasiya
Untitled

புத்தகத்தை தாண்டி நீங்கள் சிந்திக்க வேண்டும் என, ஜ.ஏ.எஸ். பரீட்சை எழுதுபவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

ஜ.ஏ.எஸ் (சிவில் சேவை) பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான பயிற்சி, உத்தரகாண்ட் மாநிலத்தின் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய கலைப் பீடத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, மோடி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் அறிவுறுத்திய மோடி,

புத்தகக் கல்வி என்பது ஒரு மனிதனை தவறிழைப்பதில் இருந்து நேர்ப்படுத்தும். ஆனால் புத்தகத்தை தாண்டியும் சிந்திக்க வேண்டும்.
குறிப்பாக நீங்கள் பணி செய்யப்போகும் மக்களுடன் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது உங்களின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்காற்றும்.

சுதந்திரத்திற்கு முன்னர், சிவில் அமைப்புக்களின் நோக்கம், ஆங்கிலேய அரசிடம் இருந்து பாதுகாப்பதாகவே இருந்தது. ஆனால் இப்போதைய சிவில் அமைப்பின் நோக்கம், மக்களுக்கு சேவை செய்வதே . எனவே மக்களுக்கும் உங்களுக்குமிடையிலான நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என, பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg