Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலவாக்கலை நாவலப்பிட்டி வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

In இலங்கை
Published: 04:50 GMT, Oct 28, 2017 |
0 Comments
1136
This post was written by : Vithushagan
DSC02164

தலவாக்கலை நாவலப்பிட்டி கெட்டபுலா கற்குவாரிக்கு அருகாமையில் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) கற்கள் சரிந்துவீழ்ந்து வீதியில் நீர் வடிந்தோடுவதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு இதனை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய மலை நாட்டு பகுதிக்கு தற்போது மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவனால் இவ்வீதியின் பல இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் ஒரு வீதியூடான போக்குவரத்தே காணப்படுகின்றன.

மலையகத்தின் பல வீதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் சாரதிகள் தமது வாகனங்களை தமக்குரிய பக்கத்தில் மிகவும் அவதானமாக செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

DSC02168 DSC02175

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg