Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடரின் வெற்றியை உறுதிபடுத்தியது பாகிஸ்தான் அணி!

In கிாிக்கட்
Updated: 05:00 GMT, Oct 28, 2017 | Published: 05:00 GMT, Oct 28, 2017 |
0 Comments
1333
This post was written by : Risha

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில் வெற்றிபெற்று, தொடரின் வெற்றியை பாகிஸ்தான் அணி உறுதிசெய்துள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரில் விளையாடிவரும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது போட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) அபுதாபியில் நடைபெற்றது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் மூன்றாவது போட்டி நாளை லாகூர் நகரில் நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg