Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய நெருக்கடியைக் கையாள ராஜதந்திர முயற்சிகளுக்கு வலியுறுத்து

In உலகம்
Published: 04:58 GMT, Oct 28, 2017 |
0 Comments
1170
This post was written by : Suganthini

வடகொரிய நெருக்கடியைக் கையாளும் வகையில், ராஜதந்திர முயற்சிகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜேம் மாட்டிஸ் வலியுறுத்தியுள்ளார்.

தென்கொரியாவுக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர், சியோலில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தென்கொரியாவின்  பாதுகாப்புச் செயலாளர் சோங் யங் மூ கோவுடன் (Song Young-moo co), வடகொரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.

ஏவுகணை மற்றும் அணுவாயுதத்திறன்களை வடகொரியா வளர்த்துவரும் நிலையில், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வடகொரியாவின் இவ்வாறான அச்சுறுத்தும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டின் மீது ராஜதந்திர முயற்சிகளை முன்னெடுப்பது சிறந்தது எனவும் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg