Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திரப் பிரகடன அறிவிப்பு: பார்சிலோனாவில் வெற்றிக் கொண்டாட்டம்

In
Published: 05:14 GMT, Oct 28, 2017 |
0 Comments
1226
icon_com
This post was written by : Suganthini

கதலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்துக்கான அறிவிப்பு வெளியாகியதைத் தொடர்ந்து, ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பார்சிலோனாவில் அமைந்துள்ள அரசாங்கத் தலைமையகத்துக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஒன்றுகூடிய ஆதரவாளர்கள்,  ஆராவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரிய கதலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு, இம்மாதம் முதலாம் திகதி நடத்தப்பட்டபோது, இதற்கு ஆதரவாக 90 சதவீதமானோர் வாக்களித்தனர்.

இதனை அடுத்து, கதலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கான ஒப்பந்தத்தில் கதலோனிய அதிகாரிகள் கையொப்பமிட்டபோதிலும், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.

இந்நிலையில், கதலோனியா நாடாளுமன்றம் நேற்றுக் கூடியபோது, கதலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கான அறிவிப்பை கதலோனியத் தலைவர் வெளியிட்டுள்ளார். கதலோனியாவுக்கான சுதந்திரம் கோரிய வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, கதலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கான ஆதரவாளர்கள் பலர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg