Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னில் தேசிய ஒற்றுமைக்கு வலியுறுத்து

In
Published: 05:38 GMT, Oct 28, 2017 |
0 Comments
1211
This post was written by : Suganthini

தற்போது ஸ்பெய்னில் நிலவும் அரசியல் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், அங்கு அமைதியும் தேசிய ஒற்றுமையும் அவசியமாகக்  கடைப்பிடிக்கப்பட வேண்டும் என, கொலம்பியா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

எப்போதும் ஸ்பெய்ன் அரசாங்கத்துக்கு கொலம்பியா அரசாங்கம் ஆதரவளிக்கும் என்பதுடன், ஸ்பெய்னில் தேசிய ஒற்றுமை பேணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனவும் கொலம்பிய ஜனாதிபதி சான்டோஸ் (Santos) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கதலோனியாவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை மெக்சிக்கோ அங்கீகரிக்காது என்பதுடன், ஸ்பெய்னுக்கும் கதலோனியாவுக்கும் இடையில் நிலவும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நம்புவதாக மெக்சிக்கோ வெளிவிவகார அமைச்சர் லூயில் விடேகராய் (Luis Videgaray) தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg