Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் ஆணையகம் நீதியாக செயற்படவில்லை: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 06:24 GMT, Oct 28, 2017 | Published: 06:24 GMT, Oct 28, 2017 |
0 Comments
1245
This post was written by : Kemasiya

தேர்தல் ஆணையகம் பாராபட்சமாக செயற்படுவதாக,  தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் தமிழ்நாட்டுக்கான முன்னாள் தலைவர் வாழப்பாடி ராம்மூர்த்தியின், 15ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்டு பேசிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர் ,

குஜராத் மாநிலத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு, அதன் பின்னரே தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது.

அதே போன்று ஆர்.கே.நகர் தேர்தல் விடயத்திலும் இதுவரை தேர்தல் திகதி அறிவிக்கப்படவில்லை. காரணம் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச்சின்னம் வழங்கப்படாதமை ஆகும். இவ்வாறாக தேர்தல் ஆணையகம் பாராபட்சம் பார்த்து செயற்படுகின்றது.

மேலும் ஆர்.கே.நகர் தெகுதியில் உள்ள போலி வாக்காளர்களை நீக்குவதற்கு, காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg