Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோனியின் மகளுக்கு கௌரவிப்பு!

In கிாிக்கட்
Updated: 06:22 GMT, Oct 28, 2017 | Published: 06:19 GMT, Oct 28, 2017 |
0 Comments
1259
This post was written by : Risha
doni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனியின் மகளை கௌரவிக்க கேரளாவின் புகழ்பெற்ற கோயிலொன்றின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அம்பலப்புழா கிருஷ்ணன் கோயில் குறித்த பாடலை பாடி, கோயிலை உலகளவில் பிரபல்யப்படுத்தியமைக்காகவே இவ் கௌரவிப்பு இடம்பெறவுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயில் குறித்த பாடலை தோனியின் 2 வயது மகள் ஸிவா, பாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவிவருகிறது.

இதன்மூலம், அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயிலும் உலகளவில் பிரபலமாகி விட்டது. இதையடுத்து, கோயில் திருவிழாவின் போது தோனி மகள் ஸிவாவை சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg