Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் அணுக்கொள்கையை ஏற்கமாட்டோம் – அமெரிக்கா

In உலகம்
Updated: 06:30 GMT, Oct 28, 2017 | Published: 06:30 GMT, Oct 28, 2017 |
0 Comments
1323
This post was written by : Suganthini

வடகொரியாவின் அணுவாயுதக்கொள்கையை ஒருபோதும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாதென, அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜேம் மாட்டிஸ் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘வடகொரியாவின் அணுவாயுதக்கொள்கையை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமென்று நான் எண்ணவில்லை. மாறாக, வடகொரியாவின் அணுவாயுதக்கொள்கையை அமெரிக்கா குறைத்து மதிப்பிடும் நிலைமையே காணப்படுகின்றது’ என்றார்.

மேலும், ‘ஏவுகணை மற்றும் அணுவாயுதத்திறன்களை வடகொரியா வளர்த்துக்கொள்வதன் மூலம் அந்நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுமென்று நம்புகின்றது. ஆனால் அவ்வாறில்லை என்பதுடன், அந்நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படமாட்டாது என்பதை முதலில் வடகொரியா விளங்கிக்கொள்ள வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

‘அமெரிக்காவையோ அல்லது அதன் கூட்டணி நாடுகளையோ வடகொரிய அச்சுறுத்த முற்பட்டால், வடகொரியாவுக்கு எதிராகப் பாரிய இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும். ஆகவே, எந்தத் தவறையும் செய்வதற்கு வடகொரியா முற்படக்கூடாது. அவ்வாறு வடகொரியாவால்  தவறு இழைக்கப்படும் பட்சத்தில், அமெரிக்காவாலோ அல்லது அதன் நட்பு நாடுகளாலோ வடகொரியா தோற்கடிக்கப்படும் நிலைமை ஏற்படும்’ எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

‘வடகொரியாவின் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு ராஜதந்திர முயற்சிகளை முன்னெடுப்பதே அமெரிக்காவின் விருப்பமாகும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg