Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலைஞரின் மீள்வருகையால் கழகக் கண்மணிகள் குதூகலம்!

In இந்தியா
Published: 06:57 GMT, Oct 28, 2017 |
0 Comments
1663
This post was written by : Kemasiya
karunanithy

தி.மு.க. தலைவர் கருணாநிதி நீண்ட நாட்களின் பின்னர் திருமணவிழா ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளமை, தி.மு.க.வினரிடம் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாக, திமு.க.வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி, தனது கொள்ளுப்பேரன் மனுரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் மகள் அக்ஸிதா ஆகியோரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, கடந்த 19 ஆம் திகதி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்துக்கு கருணாநிதி வருகை தந்தார். அவரது வருகை தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பலத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோன்று நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, மீண்டும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள தயாராகுவது தமக்கு சந்தோசத்தை தருவதாக, தி.மு.க.வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் நிலை சீரின்மை காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம்  திகதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 10 மாதங்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே தங்கி சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg