Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய கீதத்திற்காக சில விநாடிகள் எழுந்துநிற்பது கடினமா? – கௌதம் கம்பீர்

In கிாிக்கட்
Updated: 07:18 GMT, Oct 28, 2017 | Published: 07:18 GMT, Oct 28, 2017 |
0 Comments
1419
This post was written by : Risha

”தங்களது சுய தேவைகளுக்காக நிமிடக் கணக்கில் காத்துநிற்க முடிகின்ற போது, தேசிய கீதத்திற்காக சில விநாடிகள் எழுந்துநிற்பது கடினமா?” என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு குறித்த அவரது டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்னர் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்றும் அதன்போது அனைவரும் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் எனவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ”தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. மக்களை தேசப்பற்றை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg