Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவில் புதிய பதில் துணைப் பிரதமர் நியமனம்

In உலகம்
Published: 07:21 GMT, Oct 28, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Suganthini

இரட்டைக் குடியுரிமை சர்ச்சை காரணமாக அவுஸ்ரேலிய துணைப் பிரதமர் பதவியிலிருந்து பார்னாபை ஜோய்ஸ் (Barnaby Joyce) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு புதிய பதில் துணைப் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்துவரும் ஜுலி பிஷப் (Julie Bishop), அவுஸ்ரேலிய பதில் துணைப் பிரதமராக இன்று (சனிக்கிழமை) அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல்லினால் (Malcolm Turnbull) நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலிய துணைப் பிரதமர் பார்னாபை ஜோய்ஸ் உட்பட 4 அரசியல்வாதிகள், இரட்டைக் குடியுரிமையை வைத்துக்கொண்டு சட்டரீதியற்ற முறையில் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவாகியதாகவும், இதன் காரணமாக அவர்களைப் பதவி நீக்கம் செய்வதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது.

இரட்டைக் குடியுரிமையை வைத்துள்ளவர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு அரசியலமைப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து நாட்டுக் குடியுரிமை உட்பட இரட்டைக் குடியுமையை முன்னாள் துணைப் பிரதமர் பார்னாபை ஜோய்ஸ் வைத்துக்கொண்டுள்ளார். இந்நிலையில்,  இரட்டைக் குடியுரிமையை வைத்துக்கொண்டுள்ள முன்னாள் துணைப் பிரதமர் பார்னாபை ஜோய்ஸ் உட்பட அரசியல்வாதிகள் நால்வர், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், முன்னாள் துணைப் பிரதமர் பார்னாபை ஜோய்ஸ் உட்பட அரசியல்வாதிகள் நால்வரையும் பதவி நீக்கம் செய்வதற்கு உத்தரவிட்டது.

இதற்கிடையில், அவுஸ்ரேலியப் பிரதமர் நேற்று வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவிருந்தபோதும், இந்த விவகாரம் காரணமாக அவரது விஜயம் நாளைமறுதினம்  திங்கட்கிழமைக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg