Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய அரசின் கடும் நடவடிக்கை: சசிகலாவின் சொத்துக்கள் பறிக்கப்படுமா?

In இந்தியா
Published: 07:19 GMT, Oct 28, 2017 |
0 Comments
1221
icon_com
This post was written by : Kemasiya
VK_Sasikala

சசிகலாவிற்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துக்களை கண்டறிந்து, அவற்றை பறிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலி நிறுவனங்களின் சொத்துக்களை அடையாளம் காணும் பணியை, மாநில அரசுக்கள் விரைவில் செயற்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளதாக,  இன்று (சனிக்கிழமை) தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந் நிலையில், சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான “பேன்சி ஸ்டீல்ஸ் ரெயின்போ, ஏர் சுக்ரா கிளப் இந்தோ, தோகா மிக்கல்ஸ், அன்ட் ப்ர்மா சுட்டிகல்ஸ்” ஆகிய நிறுவனங்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

எனவே சசிகலாவிற்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் ஆகும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் போலி நிறுவனங்களின் சொத்துக்களை வேறு பெயர்களில் மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதை தடுக்கவும், இதற்கு உதவி செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg