மெர்சலை தொடர்ந்து சர்ச்சைக்கு தயாராகின்றது மற்றுமொரு திரைப்படம்

விஜய்யின் மெர்சலை தொடர்ந்து மற்றுமொரு சர்ச்சைக்குரிய அரசியல் திரைப்படமாக ‘இந்தியன்-2’ தயாராகுகின்றது.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டில் வெளியாகிய ‘இந்தியன்’ திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 8 போடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 30 கோடி ரூபாய் வரை வசூலை தந்த திரைப்படமே இந்தியன். ஊழலை மையமாக கொண்டு சங்கர் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகம் படமாக்கப்படவுள்ளதாக இயக்குனர் ஷங்கர் அண்மையில் அறிவித்திருந்தார். அதற்கான நடிகர் நடிகைகள் தேர்வும் இடம்பெறுகின்றது. நடப்பு அரசியலை பிரதிபலிக்கும் கதையம்சத்தில் முழு நீள அரசியல் படமாக இது தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் வசனங்களுடன் தயாராகின்றதாம் இந்தியன்-2.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பான சில வசனங்களால் கடந்த வாரம் வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள விஜய்யின் மெர்சல் போன்று மற்றுமொரு சர்ச்சை அரசியல் படமாக இந்தியன்–2 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.