Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஹிங்கிஸ்!

In டெனிஸ்
Published: 08:58 GMT, Oct 28, 2017 |
0 Comments
1207
icon_com
This post was written by : Risha

டென்னிஸ் உலகின் பெண்கள் இரட்டையர் பிரிவில் உலகின் முதல்தர வீரரும், ஐந்துமுறை கிராண்ட் சிலாம் சம்பியன் பட்டம் வென்றவருமான மார்டினா ஹிங்கிஸ், டென்னிஸ் வாழ்விலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியுடன் ஓய்வு பெறுவார் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, தனது 22ஆவது வயதில் 2003ஆம் ஆண்டுடன் தனது ஓய்வை அறிவித்த ஹிங்கிஸ், 2006ஆம் ஆண்டு மீண்டும் களம் திரும்பினார்.

தொடர்ந்து 2007-இல் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் மறுபடியும் டென்னிஸ் வாழ்விலிருந்து விலகி நிற்பதாக அறிவித்த அவர், மீண்டும் 2013ம் ஆண்டு மறுபிரவேசம் செய்து இரட்டையர் பிரிவில் உலகின் முதல்தர வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில், தற்போது அவர் மீண்டும் ஓய்வை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg