Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரிக்கமாட்டோம் – தெரேசா மே அலுவலகம்

In
Updated: 08:25 GMT, Oct 28, 2017 | Published: 08:25 GMT, Oct 28, 2017 |
0 Comments
1444
This post was written by : Suganthini

கதலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை பிரித்தானியா ஒருபோதும் அங்கீகரிக்காது என, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் அலுவலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஸ்பெய்னிலிருந்து கதலோனியா பிரிந்துசெல்வதாக கதலோனியத் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont)   ஒருதலைப்பட்சமான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். இருப்பினும், கதலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை பிரித்தானியா ஒருபோதும் அங்கீகரிக்காது’.

‘கதலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கான நடத்தப்பட்ட வாக்கெடுப்பு, சட்டவிரோதமானது என்று ஸ்பெய்ன் நீதிமன்றமும் அறிவித்துள்ளது. எனவே, ஸ்பெய்னில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவே நாம் விரும்புகின்றோம். இந்நிலையில், ஸ்பெய்ன் நாட்டு அரசியலமைப்புக்கு நாம் மதிப்பளிக்கின்றோம் என்பதுடன், ஸ்பெய்னில் தேசிய ஒற்றுமை கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் நாம் வலியுறுத்துகின்றோம்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg