Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீபாவின் கணவர்- கார் ஒட்டுநருக்குமிடையே மோதல்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

In இந்தியா
Published: 08:59 GMT, Oct 28, 2017 |
0 Comments
1358
This post was written by : Kemasiya

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் மற்றும் கார் ஓட்டுநர் ராஜ ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட மோதலில், ராஜாவினால் தன் உயிருக்கு ஆபத்து எனக் கோரி, மாதவன் பொலிஸில் முறைப்பாடு செய்தள்ளார்.

இந் நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட இந்த முறைப்பாட்டை, பிரிவு 323 மற்றும் 506 இன் கீழ், பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தீபா ஆரம்பித்த கட்சியில் இருந்து, அவரின் கணவர் விலகி, பிறிதொரு கட்சி ஆரம்பித்தார். ஆனால் அதில் தாக்குபிடிக்க முடியாமல், மீண்டும் தீபாவுடன் இணைந்தார்.

இதையடுத்து, மாதவனுக்கும், கார் ஓட்டுநர் ராஜாவிற்குமிடையே தொடர்ந்தும், மோதல் ஏற்பட்டுவந்த நிலையில், தன்னால் வீட்டில் இருக்க முடியவில்லை என்றும், தனக்கும், தனது உடமைளுக்கும் ராஜாவினால் பாதுகாப்பு இல்லையெனக் கோரியும், மாதவன் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இவ் வழக்கு தொடர்பில், தீபா தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கப்பெறாத நிலையில், குறித்த வழக்கை பொலிஸார் பதிவு செய்துள்ளதோடு விரைவில் விசாரணையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg