Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவட்ட ரீதியில் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகம்!

In இலங்கை
Updated: 08:51 GMT, Oct 28, 2017 | Published: 08:51 GMT, Oct 28, 2017 |
0 Comments
1160
This post was written by : Vithushagan

அடுத்த ஆண்டு நவம்பர் மாதமளவில் மாவட்ட ரீதியில் இலத்திரனியல் அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

ஆட்பதிவு திணைக்களத்தினால் இலத்திரனியல் ஸ்மார்ட் (Smart National Identity Card) என்ற புதிய தேசிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற இநத நிகழ்வில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ”வவுனியாவுக்கு சென்ற போது அங்குள்ள மக்கள் அடையாள அட்டை பெறுவதில் அதிக சிக்கல்களை எதிர்கொண்டு வருவதை காண முடிந்தது , அதனால் நாம் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகத்துடன் பேச்சு நடத்தினோம்.

இந்தப்பணி கடினமானது. இருப்பினும் 2018 நவம்பர் மாதமளவில் கட்டாயம் மாவட்ட ரீதியில் இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்க வேண்டும் என நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.

புதிய தேசிய அடையாள அட்டை சர்வதேச தரத்துக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுளள்து. பொதுமக்கள் விரைவாகவும் இலகுவாகவும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்” என அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg