Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேலவையில் புதிய பிரெக்சிற் பிரதிநிதி நியமனம்

In
Updated: 09:18 GMT, Oct 28, 2017 | Published: 09:18 GMT, Oct 28, 2017 |
0 Comments
1241
This post was written by : Suganthini

பிரித்தானிய நாடாளுமன்ற மேலவையில் பிரெக்சிற் விவகாரங்களைக் கையாள்வதற்கான புதிய பிரதிநிதியொருவரை, பிரதமர் தெரேசா மே நியமித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் கல்லானன்( Martin Callanan) என்பவர், பிரித்தானிய நாடாளுமன்ற மேலவையில் பிரெக்சிற்றுக்கான பிரதிநிதியாக நேற்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரைகாலமும் இந்தப் பதவியிலிருந்த ஜோய்ஸ் அனெலே (Joyce Anelay) தனது பதவியை ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து, புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரெக்சிற்றுக்கான திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஹெலிகொப்டரிலிருந்து இறங்கும் வேளையில் காயமடைந்த ஜோய்ஸ் அனெலே, தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சை கருத்திற்கொண்டு ராஜினாமாச் செய்வதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து, புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg