Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்ன் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போம் – பிரான்ஸ்

In ஐரோப்பா
Updated: 10:10 GMT, Oct 28, 2017 | Published: 10:10 GMT, Oct 28, 2017 |
0 Comments
1211
This post was written by : Suganthini

கதலோனிய விவகாரம் தொடர்பில், ஸ்பெய்ன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை பிரான்ஸ் வழங்கும் என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரொங் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கதலோனிய விவகாரம் தொடர்பில் ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோயினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம்’ என்றார்.

‘ஸ்பெய்னில் அரசியலமைப்பு பேணப்பட்டு வருவதுடன், அங்கு சட்டத்தின் ஆட்சி காணப்படுகின்றது. இதற்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் என்று ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் விரும்புகின்றார். ஆகவே, அவரின் செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து செயற்பட நாமும் விரும்புகின்றோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg