Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தித்திக்கும் அத்திப்பழ அல்வா

In
Updated: 10:49 GMT, Oct 28, 2017 | Published: 10:49 GMT, Oct 28, 2017 |
0 Comments
1364
This post was written by : Kemasiya

தேவையான பொருள்கள் :

அத்திப்பழம் – 10

பேரிச்சம் பழம் – 30

பாதாம் தூள் – 3 மேசைக்கரண்டி

சீனி – ஒரு கப்

நெய் – 50 கிராம்

எண்ணெய் – கால் கப்

கார்ன் ஃப்ளார் – 3 மேசைக்கரண்டி

ஏலக்காய்த் தூள் – சிறிது

முந்திரி – 8

செய்முறை:

அத்திப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

பேரிச்சம் பழத்திலுள்ள விதையை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

தாச்சியில் நெய் ஊற்றி, அதில் முந்திரியை உடைத்துப் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

ஒரு நாண் – ஸ்டிக் கடாயில் சீனியைப் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.

அத்துடன் நறுக்கிய அத்திப்பழம், பேரிச்சம் பழம், பாதாம் தூள், ஏலக்காய்த் தூள் மற்றும் எண்ணெய் சேர்த்துக் கிளறவும்.

நன்றாகக் கிளறிவிட்டு சுருள வேகவிடவும்.

அத்துடன் கால் கப் தண்ணீரில் கார்ன் ஃப்ளாரைக் கரைத்து ஊற்றி, நன்கு இடைவிடாது கிளறவும்.

பிறகு சிறிது சிறிதாக நெய் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்.

கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரியைச் சேர்த்துப் பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg