Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொத்துவில் பிரதேசத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி!

In இலங்கை
Published: 11:30 GMT, Oct 28, 2017 |
0 Comments
1240
This post was written by : Surenth
1874068030school

பொத்துவில் பிரதேசத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆளுநரிடம் தான் கேட்டுக் கொண்டமைக்கு அமைய உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் உரையாடி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளார் என அவர் தெரிவித்தார்.

குறிப்பாக பொத்துவிலில் இருந்து இடமாற்றம் செய்து அனுப்பட்டவர்களுக்கு பதிலாக மாற்றீடு ஆசிரியர்கள் வழங்க வேண்டியது வலயக்கல்வி அலுவலகத்தின் பொறுப்பு எனவும், இதற்கான நடவடிக்கைகளை தான் ஆளுநர் மற்றும் கல்விஅமைச்சின் உயர் அதிகாரிகளிடன் பேசியுள்ளதாகவும் அதற்கான் தீர்வு மிகவிரைவில் கிட்டும் எனவும் முஹம்மட் நஸீர் சுட்டிக்காட்டினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg