Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாவலப்பிட்டியில் மழையினால் வீடுகள் சேதம்!

In இலங்கை
Published: 12:18 GMT, Oct 28, 2017 |
0 Comments
1275
This post was written by : Vithushagan
DSC02189

நாவலப்பிட்டி  ஹுனுகொட்டுவ பகுதியில் நேற்று பெய்த கடும் மழையினால் அப்பகுதியில் உள்ள சிறிய குளம் ஒன்று உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஐந்து வீடுகளும் பாதிப்படைந்துள்ளன.

வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் வீட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும், வீடுகளில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்த 20 பேர் தற்காலிகமாக அயலவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுகளை வழங்குவதற்கு தோட்ட முகாமைத்துவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் குறித்த வெள்ளத்தின் காரணமாக ஹுனுகொட்டுவ பாடசாலைக்கு செல்லும் மார்க்கத்தில் அமைந்திருந்த பாலம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும், மீண்டும் குறித்த பகுதிக்கு சென்று வசிப்பதற்கு தாம் அச்சப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

DSC02190 DSC02193 DSC02204

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg