Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

In இலங்கை
Updated: 14:53 GMT, Oct 28, 2017 | Published: 14:50 GMT, Oct 28, 2017 |
0 Comments
1549
This post was written by : Surenth

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுணதீவு-ஆயித்தியமலை பிரதான வீதியில் உள்ள பாலக்காடு சந்தியிலேயே இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் அதிகவேகத்துடன் உழவு இயந்திரம் ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் கல் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்து இருவரையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் மற்றவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் புதியகாத்தான்குடி 03ஆம் வட்டாரத்தை சேர்ந்த 23 வயதையுடைய கே.ஆர்.எம்.ஹாரஸ் எனவும் படுகாயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதையுடைய முகமட் சியாம் எனவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்துள்ளார்.

DSC07682 DSC07683 DSC07687 DSC07688 DSC07690 DSC07691

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg