Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சூத்திரதாரி யார்? – காணொளி வெளியானது!

In இலங்கை
Updated: 15:58 GMT, Oct 28, 2017 | Published: 15:38 GMT, Oct 28, 2017 |
0 Comments
6649
This post was written by : Surenth
received6

யாழ். அரியாலை பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான பொலிஸாரின் விசாரணை வலயத்தில் உள்ள சம்பவம் தொடர்பான சீ.சி.ரி.வி காணொளி வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

இது தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள கொழும்பில் இருந்து யாழிற்கு சென்ற விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவம் இடம்பெற்ற தினம் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கள் தொடர்பான காணொளியே இவ்வாறு பொலிஸாரின் விசாரணையில் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த காணொளியில் உயிரிழ்ந்த இளைஞர் அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகியுள்ளதுடன், அதற்கு முன்னதாக சந்தேகத்திற்கு இடமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்று செல்வதும், உயிரிழந்த இளைஞர் செல்வதை தொடர்ந்து மேலும் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்வதும் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியிருப்பதுடன், துப்பாக்கிதாரிகளையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

received4 received2 received

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg