Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த அணியுடன் மைத்திரி அணியும் போட்டி!

In இலங்கை
Updated: 17:06 GMT, Oct 28, 2017 | Published: 17:06 GMT, Oct 28, 2017 |
0 Comments
1840
This post was written by : Surenth

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரியளவிலான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு ஒன்றிணைந்த எதிரணியையும் இணைத்துக் கொண்டு களமிறங்கும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

வட்டகொடை மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு, மீன் குஞ்சுகள் இடும் வைபவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், புதிய அரசியல் யாப்பில் நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு திட்டமும் இடம்பெறவில்லை. வடக்கு, கிழக்கை இணைப்பதோ அல்லது பௌத்த சமயத்தை முன்நிறுத்துவதோ போன்ற எந்த நடவடிக்கையும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கவில்லை.

நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒருமித்த சமாதான வாழ்க்கை முறையை முன்னெடுக்க வேண்டும். இதற்கமைவாகவே அரசியல் யாப்பு அமைய வேண்டும். இதற்கு அப்பால் அரசியல் யாப்பு அமையுமானால் நாம் இந்த அரசியல் யாப்புக்கு எதிராக வாக்களிக்கவும் தயாராக இருக்கின்றோம்.

இதனால் எமக்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை. அதேவேளையில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஆழமாக சிந்தித்து நாம் செயல்பட்டு வருகின்றோம். 1983ஆம் ஆண்டு போல் இது ஆகிவிடக்கூடாது என்பதை நாம் உற்று நோக்குகின்றோம்.” எனவும் இதன் போது தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg