Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள சிங்களத் தலைவர்கள் விரும்பவில்லை: சீ.வீ.

In இலங்கை
Updated: 07:50 GMT, Oct 29, 2017 | Published: 02:49 GMT, Oct 29, 2017 |
0 Comments
1656
This post was written by : Varshini
C.V.

இலங்கையின் சிங்கள அரசியல், மதத் தலைவர்களுக்கு, அதிகாரங்களைத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள எள்ளளவும் விருப்பமில்லை என்பதே உண்மையென்றும், விருப்பம் இருந்திருந்தால் தாம் இதுவரை தருவதாக உலக அரங்கில் கூறியவற்றையேனும் தந்திருப்பார்கள் என்றும் இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாரம் ஒரு கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில், ”தாங்கள் சிங்கள அரசியல் மற்றும் மத ரீதியான தலைமைகளுடன் பலதையும் பேசி வருகின்றீர்கள். சில நேரங்களில் அவர்களைச் சினம் ஊட்டும் வண்ணமும் கருத்துக்ளை வெளியிட்டு வருகின்றீர்கள். இதனால் தர இருப்பதையும் சிங்கள அரசியல் தலைவர்கள் தராது விட்டு விடுவார்களோ என்ற ஒரு பயம் தமிழ் அரசியல் தலைமைகளிடம் காணப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று இவ்வாரம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சட்டப்படி தரவேண்டிய உரித்துக்களை எம்மிடம் இருந்து பறித்தெடுத்து வைத்துக் கொண்டு ‘அதைத் தருவோம், இதைத் தருவோம்’, ‘இன்னொன்றைத் தரமாட்டோம்’ என்று அவர்கள் பேரம் பேசுவதன் பின்னணி என்ன என்ற எதிர்க்கேள்வியையும் முதலமைச்சர் எழுப்பியுள்ளார். இதுவே இன முரண்பாடுகளுக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டப்படி கூடி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இன, மத, மொழி அலகும் தம்மைத் தாமே ஆள்வதே சிறந்தது. அவ்வாறு ஆண்டுகொண்டு, முழு நாட்டையும் ஒரே நாடாகக் கணித்துக் கொண்டு, அதற்குரிய ஆட்சியையும் நிலை நாட்டலாம். ஆனால் அதற்கு இடமளிக்க சிங்கள பௌத்தர்களுக்குப் பிரியமில்லை என்று முதலமைச்சர் தமது பதிலில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இவ்வாறு உரிமைகளை நாம் பெற முயற்சிக்கும் போது சிங்களத் தலைவர்கள் என்ன நினைக்கின்றார்களோ என்று நினைத்துக் கவலைப்படுவது கையாலாகாத தனம் என்று குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன், யூதர்கள் ஒரு கொடியின் கீழ் எவ்வாறு கொண்டுவரப்பட்டார்களோ அதே போல் நாமும் ஒருங்கிணைய வேண்டும் என்றும், ஒருங்கிணைந்தால் உலக அரங்கில் நாம் முன்வைக்கப்போகும் கருத்துக்கள் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டேயாக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg