Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கத்தில் அதிரடி மாற்றம் – தேசிய பட்டியலில் உள்ளே வருகிறார் முன்னாள் ஜனாதிபதி!

In இலங்கை
Updated: 09:29 GMT, Oct 29, 2017 | Published: 03:10 GMT, Oct 29, 2017 |
0 Comments
3187
This post was written by : Varshini

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில், உயர்மட்ட ரீதியில் ரகசிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நல்லிணக்க செயலகத்தின் தலைவியாக செயற்படும் சந்திரிகாவின் ஆலோசனையும் ஆதரவும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு அவசியம் எனக் கருதியே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பதவி நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg