Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுத் தேர்தலில் போட்டியிட கதலோனியத் தலைவருக்கு அழைப்பு

In
Updated: 04:23 GMT, Oct 29, 2017 | Published: 04:23 GMT, Oct 29, 2017 |
0 Comments
1330
This post was written by : Suganthini

கதலோனியாவில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் கதலோனியத் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் Carles Puigdemont) போட்டியிட முடியும் என, ஸ்பெய்ன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஊடகமொன்றுக்கு நேற்று (சனிக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அரசாங்கப் பேச்சாளரான இனிகோ மென்டெஷ் டி விகோ (Inigo Mendez de Vigo) இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கதலோனியாவில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், கதலோனியத் தலைவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட விரும்பினால், அவர் தேர்தலில் போட்டியிட முடியும். தேர்லில் போட்டியிடுவதற்கான அழைப்பை கதலோனியத் தலைவருக்கு நாம் விடுக்கின்றோம்;’ என்றார்.

மேலும், ‘கதலோனிய அதிகாரிகளை ஸ்பெய்ன் அரசாங்கம் பணிநீக்கம் செய்துள்ளது. இருப்பினும், கதலோனியாவிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் சட்டத்தை மதித்துச் செயற்படுவார்கள் என்பதில் நான் உறுதியாகவுள்ளேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்பெய்னிலிருந்து கதலோனியா பிரிந்து தனிநாடாகும் அங்கீகாரத்தை அதன் தலைவர் அறிவித்த சிலமணி நேரத்தில், கதலோனிய நாடாளுமன்றத்தைக் கலைத்து அங்கு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், கதலோனியத் தலைவர் மற்றும் அவருடைய அனைத்து ஆதரவாளர்களையும் பதவியிலிருந்து நீக்கியுள்ள ஸ்பெய்ன் பிரதமர், கதலோனிய பிரிவினைவாத இயக்கத்தை தடைசெய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் மூலம் அம்மாகாணம் ஸ்பெய்னின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg