Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த்! – இன்று கெண்டாவுடன் மோதல்

In டெனிஸ்
Published: 05:00 GMT, Oct 29, 2017 |
0 Comments
1157
This post was written by : Varshini
TOPSHOT-BADMINTON-OLY-2016-RIO

பிரெஞ்ச் ஒபன் பேட்மிண்டன் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் அதிரடி காட்டிய இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஜப்பானின் கெண்டா நிஷிமோட்டோவை எதிர்கொள்ளவுள்ளார்.

ஸ்ரீகாந்த் விளையாடவுள்ள மூன்றாவது சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டி இதுவாகும். இப்போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ளது.

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் முதல் சுற்றை 21-14 என்ற செட் அடிப்படையில் இந்தியாவின் பிரனோய் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றை 21-19 என்ற செட் அடிப்படையில் ஸ்ரீகாந்த் கைப்பற்றினனார்.

இதனால் ஆட்டம் சமநிலையில் முடிய, மூன்றாவது சுற்றில் நிதானமாக ஆடிய ஸ்ரீகாந்த், 21-18 என்ற செட்டில் பிரனோயை பின்தள்ளி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg