Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டென்னிஸ் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வோஸ்னியாக்கி வீனஸை எதிர்கொள்கிறார்!

In டெனிஸ்
Updated: 07:59 GMT, Oct 29, 2017 | Published: 05:11 GMT, Oct 29, 2017 |
0 Comments
1220
This post was written by : Surenth

உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டியில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

சிங்கப்பூரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஒற்றையர் அரைஇறுதி போட்டியில், 7–6 (9), 6–3 என்ற நேர் செட்டில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி கரோலின் வோஸ்னியாக்கி வெற்றியை பதிவு செய்தார்.

மற்றுமொரு அரைஇறுதி போட்டியில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் பிரான்சின் கரோலின் கார்சியாவை போராடி வெற்றி கொண்டார்.

இதன்படி, 6–7 (3), 6–2, 6–3 என்ற செட் கணக்கில் செட் கணக்கில் கார்சியாவை தோற்கடித்த வீனஸ் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்த இறுதிப் போட்டி, வீனஸ் மற்றும் வோஸ்னியாக்கி ஆகியோருக்கு இடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg