Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜூனியர் உலக கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து சம்பியன்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:16 GMT, Oct 29, 2017 | Published: 06:16 GMT, Oct 29, 2017 |
0 Comments
1262
This post was written by : Surenth

ஜூனியர் உலக கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி 5–2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்து முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.

கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த இறுதி போட்டியில் பெற்றுக் கொண்ட வெற்றியின் மூலம், 32 ஆண்டு கால ஜூனியர் உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து அணி சம்பியன் கிண்ணத்தை வெல்வது இதுவே முதல்தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில், 10 மற்றும் 31ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் செர்ஜியோ கோம்ப்ஸ் கோல் அடித்து வியப்பூட்டினார். இதனால் ஸ்பெயின் 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து, இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் பிரிஸ்டர் 44ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். தொடர்ந்து இங்கிலாந்தின் கிப்ஸ் ஒயிட், போடென், மார்க் குஹி ஆகியோரும் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.

இதன்மூலம், ங்கிலாந்து அணி 5–2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg