Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் மோதல் : தீவிரவாதிகள் உயிரிழப்பு

In இந்தியா
Published: 05:28 GMT, Oct 29, 2017 |
0 Comments
1235
This post was written by : Kemasiya
border

ஜம்மு-காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கும், இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் தொடர்ந்தும் மோதல் நீடித்துவரும் நிலையில், இன்றும் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பந்திப்போரா மாவட்டம் ஹஜின் அருகே இருக்கும், மிர் மொஹாலா என்ற கிராமத்தில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அப் பகுதியை சுற்றிவளைத்த படையினர் இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர்.

இதன் பின்னர் படையினர் சுற்றிவளைப்பினை அதிகப்படுத்தும் போது, அங்குள்ள ஒரு பகுதியினர் பாதுகாப்பு படையினர் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் சுற்றிவளைப்பை நிறுத்தியுள்ள படையினர்,  கூடுதல் படையினரை வரவழைத்து கல் வீச்சுக்களை நிறுத்திய பின்னர் சுற்றிவளைப்பை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg