Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகா் இடைத் தோ்தல் தொடா்பில் டெல்லியில் கலந்துரையாடல்!

In இந்தியா
Updated: 07:06 GMT, Oct 29, 2017 | Published: 06:19 GMT, Oct 29, 2017 |
0 Comments
1269
This post was written by : Kemasiya

ஆர்.கே.நகா் இடைத் தோ்தல் தொடா்பான கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக தமிழக தோ்தல் ஆணைாயாளா் ராஜேஷ் லக்கானி டெல்லிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தமிழக தேர்தல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ள ராஜேஷ் லக்கானி, அங்கு தேர்தல் ஆணையாளரை சந்தித்து தமிழகத்தின் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை டிசெம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிப்பது குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள், ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குறித்த விஜயத்தின் போது ராஜேஷ் லக்கானி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு குறித்து கலந்துரையாடுவார் என தெரியவருகின்றது.

இந் நிலையில், அ.தி.மு.க.வின் இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்னும் விவகாரம் இழுபறியில் உள்ளது, இது குறித்த முடிவினையும் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிக்குள், தேர்தல் ஆணையகம் அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்வரும் மாதம் (நவம்பர்) முற்பகுதியில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்பதும் உறுதியாகிவிடும் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg