Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குறுகிய சிந்தனையால் அரசியல் யாப்பை சீர்குலைக்க வேண்டாம்! – துமிந்த

In இலங்கை
Updated: 05:58 GMT, Oct 29, 2017 | Published: 05:58 GMT, Oct 29, 2017 |
0 Comments
1437
This post was written by : Varshini

இலங்கையின் புதிய அரசியல் யாப்பின் ஊடாக அனைவரும் ஒன்றிணைந்து சக்திமிக்க நாட்டை உருவாக்க வேண்டும். மாறாக, அதனை குறுகிய சிந்தனையோடு நோக்கி பாதிப்பை ஏற்படுத்தக் கூடாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், விவசாயத்துறை அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வட்டகொட மடக்கும்புர பிரதேசத்திலுள்ள வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு, நேற்றைய தினம் (சனிக்கிழமை) அதில் மீன் குஞ்சுகள் இடப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்குறித்தவாறு கூறினார். அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”நாட்டிற்கு புதிய அரசியல் யாப்பொன்றை ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது. இதுவரை காலமும் அது தொடர்பில் சிந்திக்காத நிலையில், தற்போது அதுகுறித்து தீவிரமாக பேசி வருகின்றோம்.

கடந்த ஆட்சியின் போது இந்திய அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோது, 13ஆவது திருத்தச் சட்டம் மட்டுமன்றி, 12 பிளஸ் தொடர்பிலும் பேசினார்கள். அதேபோல் முன்னைய ஆட்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா நாட்டு பிரதிநிதிகளிடம் நாட்டில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டது.

ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் இதே எதிர்பார்ப்பை வழங்கினர். எனவே சகலரும் ஏற்றுக்கொள்ளகூடிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்று தேவை என்பதே உண்மை.

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களை நாம் செவிமடுத்து வருகின்றோமே தவிர, எதனையும் அங்கீகரிக்கவில்லை. சிலர் இது தொடர்பில் வீணாக குழப்பமடைந்துள்ளனர்.

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. ஆகவே எந்தவொரு சமூகத்தினரும் குழப்பமடையாமல் நிதானமாக செயற்படுவது அவசியம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg