Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உட்கட்சி ஜனநாயக விவாதம்: ஊடகங்களுக்கு அறிவுறுத்தும் மோடி!

In இந்தியா
Updated: 06:49 GMT, Oct 29, 2017 | Published: 06:46 GMT, Oct 29, 2017 |
0 Comments
1299
icon_com
This post was written by : Kemasiya
25-modi-trichy7-600

உட்கட்சி ஜனநாயகம் குறித்து இந்தியாவில் புரிந்துணர்வை ஏற்படுத்த, ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பா.ஜ.க. தலைமையகத்தில், நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தீபாவளி நிகழ்வில் ஊடகவியலாளர்களை சந்தித்து  உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்

“அரசியல் கட்சிகளுக்குள் நிதி அளிப்பது குறித்து அடிக்கடி விவாதிக்கப்படுகின்றது. ஆனால் அவற்றின் மதிப்புக்கள், சித்தாந்தங்கள், உட்கட்சி ஜனநாயகம் குறித்தோ, புதிய தலைமுறையினருக்கு எவ்வாறு வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன என்பது குறித்தோ, விவாதிக்கப்படுவதில்லை.

உட்கட்சி  ஜனநாயகம் குறித்து விவாதிக்கும் நடைமுறையை, நமது நாடு பெரியளவில் அறிந்திருக்கவில்லை. ஊடகங்கள் தங்கள் கவனத்தை அதன்பக்கம் திருப்பவேண்டும்”. என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg