Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்சிலோனாவில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி

In
Updated: 06:49 GMT, Oct 29, 2017 | Published: 06:49 GMT, Oct 29, 2017 |
0 Comments
1283
This post was written by : Suganthini

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி, பார்சிலோனாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கதலோனிய சுதந்திரப் பிரகடன எதிர்ப்பாளர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்பேரணியில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

ஸ்பெய்ன் நாட்டு தேசியக்கொடிகளை தாங்கியவாறு வாகனங்களில் பேரணியாகச் செல்லும் இவர்கள், பொலிஸாருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

இதன்போது, ‘கதலோனியத் தலைவர் கார்லெஸ் புகிடமொன்டை (Carles Puigdemont)  சிறைச்சாலைக்கு அனுப்பு’ உள்ளிட்ட கோஷங்களையும்  இவர்கள்   எழுப்பியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg