Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏவுகணைத் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுவோம் – ஈரான்

In உலகம்
Published: 08:34 GMT, Oct 29, 2017 |
0 Comments
1263
This post was written by : Suganthini

பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, ஏவுகணைகளைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுபடும் என, ஈரான் ஜனாதிபதி ஹஸன் ருஹானி (Hassan Rouhani ) தெரிவித்துள்ளார்.

தேசிய தொலைக்காட்சிச் சேவை நிகழ்வொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘எமது நாட்டினது பாதுகாப்பைக் கவனத்திற்கொண்டு ஏவுகணைகளைத் தயாரிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவோம். இருப்பினும், இவ்வாறு ஏவுகணைகளைத் தயாரிப்பதை, சர்வதேச உடன்படிக்கைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக நாம் நோக்கவில்லை’ என்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிடுவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்ததுடன், ஈரானின் அணுசக்தித்திட்டமானது அச்சுறுத்தல், வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கின்றது எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தம் தொடர்பில் குழப்பகரமான நிலைமை தோன்றியுள்ள நிலையிலேயே, ஈரான் ஜனாதிபதியின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg