Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள குடியேற்றவாசிகள் வெளியேற மறுப்பு

In உலகம்
Updated: 09:15 GMT, Oct 29, 2017 | Published: 09:13 GMT, Oct 29, 2017 |
0 Comments
1345
This post was written by : Suganthini
new

மனுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமை  மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நிலையத்திலிருந்து வெளியேற புகலிடக் கோரிக்கையாளர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, தடுப்பு முகாமிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களும் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலைமை தோன்றியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்ரேலிய குடியேற்ற செயலாக்க நிலையமான மனுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமை  நாளை (திங்கட்கிழமை) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை  விட்டு தாம் வெளியேறினால், தாங்கள் தாக்கப்படலாம் எனவும் புகலிடக் கோரிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த முகாமில்  புகலிடக் கோரிக்கையாளர்கள் 718 பேர் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg