Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்மொழியை காப்பாற்றுவோம்: தமிழுக்காக தோள் கொடுத்தார் விஷால்!

In சினிமா
Updated: 09:28 GMT, Oct 29, 2017 | Published: 09:28 GMT, Oct 29, 2017 |
0 Comments
1236
This post was written by : Kemasiya

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில், செம்மொழி இருக்கைகளில் ஒன்றாக தமிழையும் கொண்டுவருவதற்கு தேவைப்படும் பணத்தில், ஒரு பகுதியை நடிகர் விஷால் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில், ஏழு சொம்மொழிகளில் 6 மொழிகளுக்கு இருக்கையுள்ளது. ஆனால் முதல் மொழியான தமிழுக்கான இருக்கை இதுவரை வழங்கப்படவில்லை.

குறித்த இருக்கையை பெற்றுக்கொள்வதற்காக 40 கோடி தேவைப்படும் நிலையில், நடிகர் விஷால் தனது சொந்தப்பணத்தில் இருந்து 10 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.

குறித்த பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கையினைப் பெறுவதற்கு, இதுவரையில் 17 கோடியே சேரப்பெற்றுள்ளது. அத்துடன் தமிழக அரசு 10 கோடியை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

எனவே விஷாலின் இந்த சிறு உதவி ஏனையவர்களையும் தூண்டும் வகையில், தமிழுக்கான இருக்கையை உறுதி செய்யும் வகையில், அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg