Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

In கிாிக்கட்
Updated: 11:21 GMT, Oct 29, 2017 | Published: 10:12 GMT, Oct 29, 2017 |
0 Comments
1244
This post was written by : Anojkiyan
win

பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் இரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை லாகூர் அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த இலங்கை வீரர்களை மாலை அணிவித்து கைகுலுக்கி அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர்.

மேலும், திசேர பெரேரா தலைமையிலான இலங்கை வீரர்கள் அடங்கிய மிகபிரமாண்ட பதாகையொன்றும் வீதியோரத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.

மூன்று போட்டிகளை கொண்ட ரி-ருவென்ரி தொடரின், முதல் இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து இலங்கை அணி தொடரை பறிகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பின்னா் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை சா்வதேச அணிகள் தவிா்த்து வந்தன. இதனால் பாகிஸ்தான் ரசிகா்கள் கவலையடைந்திருந்த நிலையில் தற்போது  இலங்கை அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.

1996 ஆண்டு காலப் பகுதியில் பாதுகாப்பு அச்சம் காரணமான அவுஸ்ரேலியா, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அச்சம் தெரிவித்த நிலையில்,  அப்போதைய இந்திய அணித் தலைவா் அசாருதீன் மற்றும் பாகிஸ்தான் அணித்தலைவா் வசீம் அக்ரம் ஆகியோா் தலைமையில் இருநாட்டு வீரா்களையும் இணைத்த அணி ஒன்று இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கை வீரா்களை உற்சாகப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg