Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: மோடி வலியுறுத்தல்

In இந்தியா
Updated: 10:54 GMT, Oct 29, 2017 | Published: 10:54 GMT, Oct 29, 2017 |
0 Comments
1195
This post was written by : Kemasiya

இந்திய மண்ணின் ஒவ்வொரு ராணுவ வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை  கதைகளையும், பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக வானொலி மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றிய போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த வானொலி நிகழ்ச்சியின் போது மேலும் தெரிவித்த அவர்,

“ஐ.நா அமைதிப்படையில், சுமார் 18 ஆயிரம் இந்திய வீர்ர்கள் பணியாற்றுகின்றார்கள். இது உலகின் மூன்றாவது ராணுவ பங்காளியாகும்.
நவம்பர் 14 ஆம் திகதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படவுள்ளது. அதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தியா, இந்த உலகிற்கு அமைதி, சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை கொடுத்து வருகின்றது. 10 வருடங்களின் பின்னர், இந்திய ஹாக்கி அணி ஆசிய கோப்பைகளை பெற்றுக்கொண்டமைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்  கொள்கின்றேன்.

மற்றும் டென்மார்க் பட்மிண்டன் போட்டியில் சம்பியன் வென்ற, ஸ்ரீகாந்த்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அத்துடன் இம் மாதம் தீபாவளியை ராணுவத்தினருடன் கொண்டாடியமை, மிக்க மகிழ்ச்சியையும், மறக்கமுடியாத நினைவுகளையும் தந்துள்ளது.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg