Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியல் யாப்பிற்கு நாமே வித்திட்டோம்! – டி.யூ.குணசேகர

In இலங்கை
Updated: 10:46 GMT, Oct 29, 2017 | Published: 10:46 GMT, Oct 29, 2017 |
0 Comments
1481
This post was written by : Varshini

இலங்கையின் புதிய அரசியல் யாப்பிற்கு இலங்கை கம்யூனிஸ கட்சியே வித்திட்டதென, அக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ.குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1944ம் ஆண்டு காலப்பகுதியில் தமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கையே இந்த புதிய அரசியலமைப்பு சட்டம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு நிறைவை ஞாபகப்படுத்தும் செயலமர்வு ஒன்று ஹட்டன் கிறிஸ்துவ தொழிலாளர் முன்னணியின் மண்டபத்தில், இலங்கை கம்யூனிஸ கட்சியின் நுவரெலியா பிராந்திய பொறுப்பாளர் மோகன் சுப்பிரமணியம் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்குறித்தவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்-

”ரஷ்ய புரட்சியானது, ஒன்றுப்பட்ட சமூகங்களுக்கு இடையில் சமாதானத்தை உருவாக்கும் வகையில் தோழர் வி.ஐ.லெனின் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த புரட்சியானது பல நாடுகளுக்கு விரிவடைந்ததன் பின்பே பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு சக்தியாக அமைந்தது. அந்த வகையில் இலங்கையில் வாழ்கின்ற மக்களும் இந்த ரஷ்ய புரட்சியின் ஊடாகவே விடுதலையும் உரிமை பெற்றவர்களாகவும் வாழ்கின்றனர்.

ரஷ்ய புரட்சியின் பிரகடனம், கடந்த 1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்களால் கொண்டுவரப்பட்டது.

தமிழர்கள் ஆகிய எமது உரிமைக்காவும், சுதந்திரத்திற்காவும் சக்தியுடன் போராடக்கூடிய எமது நண்பர்கள் ரஷ்யாவில் இருக்கின்றார்கள் என லெனினை சுட்டிக்காட்டிய பொன்னம்பலம் அருணாச்சலம், இவரின் ஆதரவைக் கொண்டு எமது உரிமையை வென்றெடுக்க நாம் தயங்க மாட்டோம் என்று அப்போது கூறினார்.

ரஷ்ய புரட்சியை உலகலாவிய ரீதியில் பரவச் செய்த வி.ஐ.லெனின் அவர்கள், தனது முதல் கோரிக்கையாக அனைத்து நாடுகளும் சமாதானத்துடன் வாழ வேண்டும் என்ற விடயம் காணப்பட்டது. இதைத்தான், கார்ல்மார்க்ஸ் தனது புத்தகத்தின் ஒரு பகுதியில் குறிப்பிட்டுள்ளார்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg